News

இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

application
Written by admin

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தாட்கோ

2017–18–ம் நிதியாண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர்களுக்காக நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல், தொழில் முனைவோர், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு மற்றும் ஆஸ்பத்திரி அமைத்தல், சுயஉதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி, பொருளாதார கடனுதவி, விவசாயத்திற்கான விரைந்து மின்இணைப்பு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் மட்டும் மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கலாம். மற்ற திட்டங்களுக்கு http://application.tahdco.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் இந்து ஆதிதிராவிடராகவும், 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு மற்றும் ஆஸ்பத்திரி அமைக்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், சட்ட பட்டதாரி என்றால் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், பட்டய கணக்கர் முடித்தவர்கள் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சுயஉதவிக்குழுக்கள் என்றால் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் வரையிலும், ஐ.ஏ.எஸ், குரூப்–1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் என்றால் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, ‘மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக 3–ம் தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி–628101’ என்ற முகவரியில் அலுவலக நாட்களில், நேரில் அணுகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.application

About the author

admin

Leave a Comment